என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நிச்சயதார்த்தம்... தனது சிறு வயது தோழியை கரம்பிடிக்கிறார் குல்தீப் யாதவ்!
- நிச்சதார்த்த நிகழ்வில் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை கரம் பிடிக்கவுள்ளார்.
நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரிங்கு சிங் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
Next Story






