என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப் யாதவ்
- மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
- டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
இப்போட்டியில் ரிக்கல்டன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார்.






