என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜடேஜா, குல்தீப் யாதவ் இருவரும் இடம்பெற வேண்டும்- ஹர்பஜன் சிங்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜடேஜா, குல்தீப் யாதவ் இருவரும் இடம்பெற வேண்டும்- ஹர்பஜன் சிங்

    • லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும்.
    • ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற வேண்டும். 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்களு டன் இந்திய அணி களம் இறங்க வேண்டும்.

    ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×