என் மலர்
நீங்கள் தேடியது "Harbhajan singh"
- 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
- என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.
இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.
நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.
நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
- இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியில் சாஹல் இணைந்ததை குறிக்கும் விதமாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் மைதானத்திற்கு வெளியே படுத்திருக்கும் புகைப்படம் மீம் மெட்டிரியலாக வைரலாகியது. அந்த புகைப்படத்தையும் கங்காரு படுத்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எனது சாம்பியன் சகோதரர் சாஹலுக்கு 18 கோடி. பஞ்சாபிற்கு வரவேற்கிறோம். பாட்ஷா பந்துவீச்சாளரே கங்காரு உங்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டது.
- பெர்த் டெஸ்டில் நிதிஷ் குமாரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
- ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? என ஹர்பஜன் சிங் கேள்வி.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோ எங்கே என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
உங்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதை விட உங்களுக்கு வேறு ஆப்சன் இல்லை. ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? அவர்களை ஒயிட்பால் கிரிக்கெட் வடிவத்திற்குள் சுருக்கிவிட்டோம். இரண்டு மூன்று வருடங்களுக்காக ஷர்துல் தாகூரை உருவாக்கினோம். தற்போது அவரை எங்கே? திடீரென இந்த தொடரில் நிதிஷ் குமார் போன்ற பந்து வீச அழைக்கிறீர்கள்.
சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ்ஆக இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்று நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன் ஆவார்.
ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்திருந்தார்.
- இப்படத்தை seantoa studio- நிறுவனம் தயாரித்துள்ளது.
- இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 'பிரண்ட்ஷிப்'என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் லாஸ்ஸியா, அர்ஜூன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் நடிக்கும் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்...என்று கூறியுள்ளார்.
'சேவியர்' படத்தில் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாவும், ஹர்பஜன் சிங் டாக்டர் வேடத்தில் நடிக்க உள்ளதும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர்களுடன் வி.டி.வி கணேஷ், ஜி.பி.முத்து, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்க உள் இப்படத்தை இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை seantoa studio- நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Excited to be working with director John and the team once again! This movie is going to be an absolute entertainment. Get ready! ? #Savior
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 5, 2024
என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.
என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்… pic.twitter.com/DTrlkAojwt
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.
இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது.
இந்நிலையில் இமானே கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.
ஆண்களுக்கு எக்ஸ் ஒய் குரோமோசோமும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இமானே கெலிஃப்-க்கு ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய 5 ஆல்ஃபா ரிடக்டேஸ் இன்சஃபீசியன்ஸி (5-alpha reductase insufficiency) என்ற குறைபாடு இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடு இருக்கும் ஆண்களுக்கு முகத்தில் மீசை, தாடி ஆகியவை இருக்காது.
Take the Gold back @Olympics This isn't fair https://t.co/ZO3yJmqdpY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 5, 2024
இந்நிலையில், இமானே கெலிஃப்-க்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் தங்க பதக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இமானே கெலிஃப் வெள்ளை நிற சட்டையுடன் ஓட்டு போடும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்பஜன் சிங், "இது அநியாயம், இவருக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கத்தை ஒலிம்பிக் அமைப்பு திரும்பப்பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- லப்பர் பந்து படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா @Prince_Pictures @iamharishkalyan ?@tamizh018? #GethuDinesh?
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 27, 2024
- கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.
- குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும்.
கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் தங்களின் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு சமூகமாக பெண்களுக்கு பாதுகாப்பான, மதிப்புமிக்க வீடு மற்றும் பணியிடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது கடமை. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை கொடூரமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இப்போது இல்லையென்றால் எப்போது? நடவடிக்கைக்கான நேரமிது" என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
- யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தினார்.
- விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.
புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
- நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.
வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.
15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.
இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.
- லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
- வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.
Winning celebrations from Yuvraj Singh, Harbhajan and Raina. ?? pic.twitter.com/mgrcnd8GpH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2024
இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஹர்பஜன் சிங்கை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
மாநிலங்களவை எம்.பி ஹர்பஜன் சிங் எதற்காக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தை தான் அவர் வீணடித்து கொண்டிருக்கிறார் என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்த எக்ஸ் பதிவை ஹர்பஜன் சிங் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய எம்.பி சம்பளத்தை படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவி செய்கிறேன். அதில் ஒரு ரூபாயை கூட நான் எனக்காக செலவு செய்தது கிடையாது. நானும் வரி செலுத்துபவன் தான். உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது படிப்பதற்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- பாகிஸ்தானில் உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி.
- இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள்.
மும்பை:
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியும் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அங்கே (பாகிஸ்தான்) உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள். கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரம். ஒரு சிறந்த பயிற்சியாளர், வழிகாட்டி, நேர்மையான மற்றும் எங்கள் 2011 அணியில் உள்ள அனைவருக்கும் மிகவும் அன்பான நண்பர். 2011 உலகக் கோப்பையை வென்ற எங்கள் பயிற்சியாளர். சிறப்பு மனிதர் கேரி.
இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.