search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sreesanth"

    • நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.
    • அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

    இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார். கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    • ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும்.
    • அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி.

    ஐபிஎல் 2024 தொடர் நாளை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் டோனி குறித்தும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டோனியிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும். அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி. அவரிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர்.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    • எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-

    போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
    • ஸ்ரீ சாந்தை அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    லக்னோ:

    லக்னோ-பெங்களூர் இடையே போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது விராட்கோலிக்கும், காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    விராட்கோலியிடம் லக்னோ வீரர் கெய்ல் மேயர்ஸ் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த காம்பீர், கெய்ல் மேயர்சை அவரிடம் என்ன பேச்சு என்று கூறி அழைத்து சென்றார். இதனால் கோலி ஆத்திரம் அடைந்தார். இதேபோல லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்குடன் கைகுலுக்கும் போதும் கோலி வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தினார்.

    அதைத்தொடர்ந்து காம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரையும் மற்ற வீரர்கள் தடுத்தப்போது வாக்குவாதம் நிற்கவில்லை. காம்பீர் முன்னோக்கி சென்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவரை கோலி வம்புக்கு இழுத்ததால் ஆத்திரம் அடைந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. பரிசளிப்பு நிகழ்வின்போது விராட் கோலி கோபத்துடன் காணப்பட்டார். இந்த மோதல் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    காம்பீரும், விராட்கோலியும் இது மாதிரி மோதிக் கொள்வது இது முதல்முறையில்லை. டெல்லியை சேர்ந்த இருவரும் பலமுறை இது மாதிரி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

     

    இந்த நிலையில் விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

    என கூறியுள்ளார்.

    ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sreesanth #SC
    புதுடெல்லி:

    2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ‘கடினமான தண்டனையான ஆயுட்கால தடையை எல்லா வழக்குகளிலும் அமல்படுத்தக்கூடாது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 3 மாத காலத்துக்குள் ஸ்ரீசாந்திடம் விசாரணை நடத்தி அவரது தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  #Sreesanth #SC
    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட விரும்புவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறினார். #Sreesanth
    சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனது வாழ்க்கையில் இன்னும் மிஞ்சி இருப்பது என்ன வென்று எனக்கு தெரியாது. எது என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேனோ? அந்த கிரிக்கெட்டை கடந்த 6 வருடங்களாக நான் விளையாடவில்லை. நாட்டின் உயரிய கோர்ட்டின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் மதித்து கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்ப என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் பள்ளி மைதானத்துக்கு பயிற்சிக்கு சென்றால் என்னை யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்த விஷயமாகும்.

    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

    இருண்ட காலத்தில் எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவி, அவரது பெற்றோர் என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்’.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். வருகிற 18-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.  #Sreesanth

    ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    புதுடெல்லி:

    2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
     
    குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இது சம்பந்தமாக விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


     
    இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
     
    மேலும் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க  வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #BCCI #Sreesanth
    ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எடுத்தது.

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்க கோரி அவர் பி.சி.சி.ஐ.யிடம் முறையிட்டார். ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். கிரிக்கெட் வாரியம் இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுட் கால தடை நீடித்து வந்தது.

    கேரளா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், இங்கிலாந்து அணியில் தன்னை விளையாட அனுமதிக்க கோரியும் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீசாந்தின் வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந்த்துக்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. ஆயுள் கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது. சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி ஐகோர்ட்டு விடுவித்து இருந்தது. இதனால் அவரை இங்கிலாந்து கிளப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    கிரிக்கெட் வாரிய வக்கீல் கூறும் போது ஸ்ரீசாந்துக்கு எதிராக குற்றத்தை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருந்ததால் அவருக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுள்கால தடை விதித்தது. என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது. #Sreesanth #SupremeCourt #IPL #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #BCCI #Sreesanth
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசந்த். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

    இதுதொடர்பானை வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஸ்ரீசந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது.

    2015-ம் ஆண்டு பாட்டியாலா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீசந்த் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஸ்ரீசந்த் மீதான வாழ்நாள் தடையை பிசிசிஐ நீக்கவில்லை.

    இதனால் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் மனுதாக்கல் செய்தார். அப்போது பிசிசிஐ விதித்துள்ள வாழ்நாள் தடையை நீக்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச்-ல் பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவு செல்லாது என அறிவித்தது.



    இந்நிலையில் பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழங்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்த்ரசுட் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

    ஸ்ரீசந்த் தனது மனுவில், நான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன். இதுவே போதுமான தண்டனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×