என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும் -ஸ்ரீசாந்த்
Byமாலை மலர்16 March 2019 11:57 AM IST (Updated: 16 March 2019 11:57 AM IST)
ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட விரும்புவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறினார். #Sreesanth
சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனது வாழ்க்கையில் இன்னும் மிஞ்சி இருப்பது என்ன வென்று எனக்கு தெரியாது. எது என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேனோ? அந்த கிரிக்கெட்டை கடந்த 6 வருடங்களாக நான் விளையாடவில்லை. நாட்டின் உயரிய கோர்ட்டின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் மதித்து கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்ப என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் பள்ளி மைதானத்துக்கு பயிற்சிக்கு சென்றால் என்னை யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்த விஷயமாகும்.
ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.
இருண்ட காலத்தில் எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவி, அவரது பெற்றோர் என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்’.
இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.
ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். வருகிற 18-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. #Sreesanth

Next Story
×