என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jofra Archer"

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (இ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

    • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்சர் வீசினர்.
    • காயப்படுத்த வேண்டு என்ற திட்டத்தில் அவ்வாறு பந்து வீசினர் என கைஃப் குற்றச்சாட்டு.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

    பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கைஃப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார்.

    இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங் கழற்றி விடப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இதனை தொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங்குக்கு பதிலாக ஆர்ச்சர் அணியில் இடம் பிடித்துள்ளார். 

    இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கீப்பர்), ஜேமி ஸ்மித் (WK), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.

    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது.
    • ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வார), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2 -வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

    நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ஆடும் லெவன்:-

    ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர், ஜோ ரூட், டக்கெட், பஷீர், பெத்தேல், ஹாரி புரூக், கார்ஸ், சாம் குக், கிராலி, ஓவர்டன், ஆலி போப், ஸ்மித், ஜோஷ் டங் , வோக்ஸ்.

    • 2021ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
    • ஐபிஎல் தொடரின்போது கை விரலில் முறிவு ஏற்பட்டது.

    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் கடந்த 2021-ல் இருந்து தொடர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் உள்ளார். இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடரில் ஆர்ச்சர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது கை விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் தேர்வாளர் லூக் ரைட் தெரிவித்துள்ளார்.

    அவரை சசக்ஸின் 2ஆம் கட்ட அணியில் விளையாட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் துர்ஹாம் அணிக்கெதிரான சசக்ஸ் விளையாடும் போட்டியில் களம் இறக்கப்படுவார். சசக்ஸ் அணிக்காக விளையாடி, அனைத்து விசயங்களும் நன்றாக சென்றால், அதன்பின் இந்திய அணிக்கெதிரான இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார்" என்றார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் (ஹெட்டிங்லே) ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் (எட்ஜ்பாஸ்டன்) ஜூலை 2ஆம் தேதியும், 3ஆவது டெஸ்ட் (லார்ட்ஸ்) ஜூலை 10ஆம் தேதியும், 4ஆவது டெஸ்ட் (ஓல்டு டிராஃப்போர்டு) ஜூலை 23ஆம் தேதியும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் (ஓவல்) ஜூலை 31ஆம் தேதியும் தொடங்குகிறது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

    நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

    ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.

    முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

    • ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
    • இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி

    நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.

    அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

    • ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
    • தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    ஐதராபாத்:

    18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்து அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார்.

    இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.

    ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:

    ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0

    மொஹித் சர்மா: 4-073-0

    பாசில் தம்பி: 4-0-70-0

    • ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கிம்பர்லி:

    தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.

    மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

    இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

    ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

    ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ×