என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

முதல் ஓவரில் 2 விக்கெட்: இதற்குத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ ஆர்ச்சர்- வைரலாகும் புகைப்படம்
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.
சண்டிகர்:
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.
முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.






