என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ச்சர்"

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.

    • ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • புள்ளி பட்டியலில் மும்பை அணி தலா 10 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்னும் 17 லீக் ஆட்டங்களே மீதம் உள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை. புள்ளி பட்டியலில் குஜராத் (16 புள்ளி) முதல் இடத்திலும், சென்னை (13 புள்ளி) 2-ம் இடத்திலும், லக்னோ (11 புள்ளி) 3-ம் இடத்திலும் உள்ளன.

    4 முதல் 8 இடங்களில் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன. புள்ளி பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.

    இந்நிலையில், சில ஆட்டங்களில் ஆடிய ஆர்ச்சர் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஆர்ச்சருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டானை மும்பை அணி நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.

    ×