என் மலர்

  நீங்கள் தேடியது "Mohammad kaif"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.
  • ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது.

  இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கையிப், டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது:

  அவர்கள் ஒரு நல்ல வலுவான அணியைக் கொண்டிருப்பதாலும், முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியதாலும், இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (இந்தியா) வெற்றி பெற வேண்டும்.

  சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது. இது சில காலத்திற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, ஆனால் வெற்றி பெறவில்லை.

  ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தேர்வில் சிறந்த 11 பேரை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணி தேர்வில் சந்தேகம் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
  புதுடெல்லி:

  சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

  அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


  பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

  அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 325 ரன்னை சேஸிங் செய்த நாளில் முகமது கைப் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். #Kaif
  இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், தலைசிறந்த பீல்டராகவும் திகழ்ந்தவர் முகமது கைப். 19 வயதிற்கு உட்பட்டோருக்காக உலகக்கோப்பையை இவரது தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. யுவராஜ் சிங் உடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

  2000-த்தில் இந்திய தேசிய அணியில் முகமது கைப்பிற்கு இடம் கிடைத்தது. 2006-ம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இதுவரை 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு சதத்துடன் 624 ரன்களும், ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்களுடன் 2753 ரன்களும் அடித்துள்ளார். கைப் என்றாலே நமக்கு ஞாபகம் வருது கங்குலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிதான்.  இதில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து திரெஸ்கோதிக் (109), கேப்டன் மைக்கேல் வாகன் (115) ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. அந்த நேரத்தில் 275 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சேஸிங் செய்வது இயலாத காரியம். இதனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் டி-சர்ட் காலரை தூக்கிவிட்டு இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கினார்கள்.

  சச்சின் தெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கைப் களம் இறங்கினார். அப்போது இந்தியா 24 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 256 பந்தில் 180 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யுவராஜ் சிங் உடன் கைப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. யுவராஜ் சிங் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கைப் 75 பந்தில் 87 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.  புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தாதா கங்குலி தனது சட்டையை கழற்றி கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்த வெற்றியை மறந்திருக்கமாட்டார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்ற   முகமது கைப்பையும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நாளாக கருதப்படும் ஜூலை 13-ந்தேதி (2002-ம் ஆண்டு) அன்று கைப் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  ×