என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மரியாதை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்: கருண் நாயர் நீக்கப்பட்டதால் சுப்மன் கில் மீது கைஃப் சாடல்..!
    X

    மரியாதை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்: கருண் நாயர் நீக்கப்பட்டதால் சுப்மன் கில் மீது கைஃப் சாடல்..!

    • இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
    • அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×