என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணி தேர்வு எப்படி இருக்கும்?- கைஃப் கணிப்பு..!
- தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்க வாய்ப்பு.
- அக்சர் படேல் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்படலாம்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வருகிற 19ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்குள் கிரிக்கெட் விமர்சகர்கள் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப், யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ, அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படலாம்.
சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்திலம், திலக் குமார் அடுத்தும் களம் இறக்கப்படலாம். அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இடையே கடும் போட்டி நிலவும். ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு குறைவுதான். முகமது சிராஜ், ஜித்தேஷ் சர்மா ஆகியோரையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.






