என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஏன் இந்த அவசரம்.. ரோகித் நீக்கம் அதிர்ச்சியாக உள்ளது- ஹர்பஜன் சிங்
    X

    ஏன் இந்த அவசரம்.. ரோகித் நீக்கம் அதிர்ச்சியாக உள்ளது- ஹர்பஜன் சிங்

    • ரோகித் ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
    • சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு இது ஒரு புதிய சவால் என்றாலும், ரோகித் வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் அணியையும் வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ரோகித் கேப்டனாக இல்லாமல், ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.

    ஒருவேளை அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால், மீண்டும் கேப்டனாகத்தான் செல்வார் என்று நான் நினைத்தேன். அவர் சமீபத்தில்தான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர். எனவே, குறைந்தபட்சம் இந்த ஒரு தொடருக்காவது அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    நீங்கள் 2027 உலகக்கோப்பையைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், அது இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஒருவேளை இன்னும் 6 அல்லது 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கூட அவர் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே நேரத்தில், ரோகித் சர்மா கேப்டனாக இல்லாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    Next Story
    ×