என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ரியா சரோஜ்"

    • எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான்.
    • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியா சரோஜின் புகைப்படத்தை லைக் செய்தேன்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இளம் எம்பியான ப்ரியா சரோஜ் இருவருக்கும் நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

    இந்த நிலையில் சமாஜ்வாதி எம்பி ப்ரியா சரோஜ் உடன் காதல் உருவானது எப்படி என்று நட்சத்திர வீரர் ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான். அப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் முகாமிட்டிருந்தேன். அப்போது இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் பேஜ் ஒன்றில் ப்ரியா வின் புகைப்படம் பதிவிடப்பட்டு வாக்கு கோரப்பட்டது.

    ப்ரியா சரோஜின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சகோதரி எடுத்து பதிவிட்டு வந்தார். அவர் என்னுடைய ரசிகரின் பேஜ் ஒன்றில் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த உடன் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    உடனடியாக அவரின் புகைப்படத்தை லைக் செய்துவிட்டேன். மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்த போது, அது சரியாக இருக்காது என்று நிறுத்திவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்கு பின் ப்ரியா சரோஜ் என்னுடைய இன்ஸ்டா புகைப்படங்களை லைக் செய்திருந்தார்.

    அதன்பின் நானே நேரடியாக மெசேஜ் அனுப்பினேன். அப்படிதான் எல்லாமே தொடங்கியது. ஓரிரு வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பேச தொடங்கிவிட்டோம். போட்டி தொடங்குவதற்கு முன், போட்டிக்கு பின் என்று பேசிக் கொண்டே இருந்தோம். அதன்பின் எனக்குள் காதல் ஏற்பட்டது.

    என்று ரிங்கு சிங் கூறினார்.

    • ரிங்கு சிங்கு எம்.பி. பிரியா சரோஜிக்கும் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
    • இவர்களது திருமணம் 3 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

    கடந்த 8-ம் தேதி ரிங்கு சிங்குக்கும், எம்.பி. பிரியா சரோஜிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இவர்களது திருமணம் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி 2026-ல் நடைபெறும் என குடுப்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடைபெறும் திருமணத்திற்கான இறுதி தேதி விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர்.

    நவம்பர் மாதத்தில் ரிங்குவின் கிரிக்கெட் பணிகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது

    இந்திய வீரர் ரிங்கு சிங், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸ்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு கெத்தாக இடம் பிடித்தவர் ரிங்கு சிங். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது

    இந்நிலையில் ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப்ரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 500 ரன்களை எடுத்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×