என் மலர்
நீங்கள் தேடியது "Super 8"
- உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
- பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.
லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர்.
பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர். கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம்.
ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.
பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம்.
இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
- 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 107 ரன் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற இலங்கை அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் களத்தில் உள்ளன.
- முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது.
- மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் தீட்சனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 31 ரன்னும், வெல்லாலகே 29 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
- இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
சென்னை:
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
- இங்கிலாந்தின் லியம் டாசன் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், ஜோப்ர ஆர்ச்சர், ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
35 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தவித்த இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாகப் போராடி சதமடித்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார் ஹாரி புரூக்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கியது
- தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கனமழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும்
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது
- தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில், மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
- தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
- இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள்வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கையில் தொடர்ந்து ஆடி வருவது அந்த அணிக்கு சாதகமாக சூழலாகும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாடக் கூடியது.
டி20 போட்டிகளில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.
இரு அணிகளும் இந்தத் தொடரில் ஒரு போட்டியில் தோற்றன. சூப்பர் 8 சுற்றில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் குவித்தது.
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
நமீபியா, ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தான் ஆடிய 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறின.
- தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
- நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.
இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.






