என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சமாஜ்வாதி எம்.பி.யை காதலித்து கரம் பிடிக்கும் ரிங்கு சிங்.. நிச்சயதார்த்த தேதி இதுதான்
- ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
- அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.
அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.
இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார்.






