அட்லியின் படம் நான் இதுவரை நடிக்காத கதைக்களம் - நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஷாருக்கான்
ஷாருக்கான்
Published on

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஷாருக்கான் - அட்லி

அதில், அட்லி இயக்கும் ஜவான் படம் குறித்து அவர் பேசுகையில், " அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com