search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajini"

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 




    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரன்டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாதி ஒரு மணி 19 நிமிடங்களும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யூ/எ சான்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.




    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வெளியானது. இப்பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், வணக்கம் சுப்பு, ரஜினிகாந்த் பேசுறேன். ஹும்கும் பாடலை கேட்ட பிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். நீங்க சூப்பர் சுப்பு. உங்களுக்கு இது பெரிய வெற்றியாக இருக்கும், கொண்டாடுங்கள். நன்றி என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன்-ரஜினி இருவரின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    கமல் - ரஜினி -  லோகேஷ் கனகராஜ்
    கமல் - ரஜினி -  லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் கமல்-ரஜினியின் சந்திப்பு குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நன்றி! கமல் சார், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. இது எனக்கு ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, இளையராஜா வீட்டிற்கு சென்று கிரிக்கேட் விளையாடி உள்ள சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் திரைக்கதையில் இன்னும் சிறப்பு சேர்க்க ரஜினி தரப்பில் சில யோசனைகள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என்று தெரிகிறது.

    ரஜினிக்கு சமீபத்திய குடும்பப் பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்திருந்தது. புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
     இது போன்ற தருணங்களில் சில வருடங்களுக்கு முன்பு இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார். அங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக போதனைகள் மற்றும் ஆத்மஞான அமைதி அவரை உற்சாக மனநிலைக்கு மாற்றி வைக்கும்.


    ஆனால் இன்று அவரது உடல்நிலை மாற்றத்திற்குப் பிறகு இமயமலைக்கு போவதை தவிர்த்து வருகிறார். அதற்கு மாற்றாக ஆன்மிக அமுதம் அருந்தும் இடம் எங்காவது கிடைக்குமா? என்று ரஜினி ஏங்கிக் கொண்டிருந்தார். அந்த குறைதீர்ந்து விட்டது. இசைஞானி இளையராஜாவும், அவரது வீடும் தான் ரஜினியின் ஆன்மிக தாகத்தை தணிக்கும் இடமாக உள்ளன. அதனால்தான் சமீபகாலத்தில் பல முறை இளையராஜாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி.

    ரஜினி - இளையராஜா

    இங்கு வந்தால் நான் நிம்மதியாக உணர்கிறேன் சாமி.. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே என்று இளையராஜாவிடமே ரஜினி ஏக்கத்துடன் கேட்டது இதனால்தான். இளையராஜாவை சந்திப்பது அவருக்கு இமய மலைக்கு போய் வந்த மன ஆறுதலை கொடுத்திருக்கிறது என்பதே நிஜம். இருவருக்குமிடையேயான நட்பு என்பது திரைத்தொழிலைத் தாண்டியது.


    எப்போதெல்லாம் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்போது ஒரு போனை போட்டு சாமி உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்று கேட்டு விட்டு புறப்பட்டுவிடுவார் ரஜினி. அப்படி ஒருநாள் ரஜினி இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு செல்ல ரஜினி வருகையால் வீடே குதூகலமாகியிருக்கிறது. அப்போது கார்த்திக் ராஜாவின் மகன் யதீஷ்வர் படித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினியின் புகழ் வெளிச்சம் புரியாத வயது.


    தனிமையில் இளையராஜாவும் ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிள் என்னோட கிரிக்கெட் விளையாட வர்றீங்களா? என்று யதீஷ்வர் கேட்க, இளையராஜாவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். டேய் அவரு யாரு.. அவரை போயி உன்கூட விளையாடக்கூப்பிடுற என்று செல்லமாய் பேரனை அதட்டல் போட்டிருக்கிறார்.


    உடனே பக்கத்திலிருந்த ரஜினி, சாமி விடுங்க குழந்தை தானே என்று சொல்லியபடியே இதோ வர்றேன் கண்ணா என்று துள்ளிக் குதித்து ஓடியிருக்கிறார். ரஜினி பந்து வீச யதீஷ்வர் மட்டையை வீசி ஆட, பிறகு ரஜினி கிரிக்கெட் ஆட இப்படியே பொழுது கழிந்திருக்கிறது. இருவரும் விளையாடுவதை புல்வெளியில் நின்று சிரித்தபடியே ரசித்து மகிழ்ந்திருக்கிறார் இளையராஜா. ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் இந்த ஆத்மார்த்தமான ஆன்மிக நட்பு அகல் விளக்கும் ஒளியும்போல ஒன்றைவிட்டு ஒன்று எப்போதும் நீங்காது இணைந்தே இருக்கும்.
    ×