என் மலர்

  சினிமா

  ரஜினியை அடுத்து பிரபல நடிகரை இயக்கும் முருகதாஸ்
  X

  ரஜினியை அடுத்து பிரபல நடிகரை இயக்கும் முருகதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
  தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
  Next Story
  ×