search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic rules"

    • வாகன ஓட்டிகளுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
    • 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் சங்கர், கன்னியப்பன் உள்பட போலீசார் நேற்று ஆற்காடு சாலை அரசு கல்லூரி அருகே வாகன தணிக்கை செய்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், வாகனத்திற்குரிய ஆவணங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகன ஓட்டக்கூடாது என்றும், டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

    அப்போது மது அருந்தி விட்டு வந்த 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 தமிழக அரசு வழங்க வேண்டும்
    • அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் சம்பத் வரவேற்பு உரையாற்றினார்.இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச் செயலாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு மிகவும் சிரமப்பட்டு பதிய வேண்டியிருக்கிறது.

    எனவே ஆன்லைன் பதிவினை எளிதாக பதிய ஆவணம் செய்ய வேண்டும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போக்குவரத்து விதி மீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநில செயலாளர் இந்து வழக்கறிஞர் முன்னணி ரத்தின குமார், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.
    • பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவு க்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கரவா கனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 434 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 44 பேர் உள்பட மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது. நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய1147 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்க ளிடமிருந்து அபராதமாக ரூ.7,72,200 வசுலிக்கப்பட்டது மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்து க்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.
    • கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்த தலைமையுரை ஆற்றி னார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன் மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுனை முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் நன்றி கூறினார். கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களிடம் வழங்கினார்கள்.

    • போக்குவரத்து விதிகளை மீறியதாக நடவடிக்கை
    • விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளூர் டி.எஸ்.பி. குமார் மேற்பார்வையில் போளூர், கலசப்பாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமுத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன், லட்சுமிபதி, பிரபாவதி, சப்- இன்ஸ்பெக்டர்கள். சிவக்குமார், சீனிவாசன் மகாலிங்கம் ராஜ் ஜெய்குமார் சரவணன், மற்றும் போலீசார் ஆண்டு முழுவதும் வாகன தணிக்கை செய்தனர்.

    கடந்த 12 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஒட்டிய 34 ஆயிரத்து 503 பேர் மீதும் கார் ஓட்டும் போது சீட்டு பெல்டு அணியாமல் இருந்ததாக 7ஆயிரத்து 677மீதும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 7 ஆயிரத்து 581, பேர் மீதும் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்த வழக்கில் 4 ஆயிரத்து 910 பேர் மீதும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4 ஆயிரத்து 840 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அதிகம்பாரம் ஏற்றி செல்லுதல், உரிமை இன்றி வாகனம் ஓட்டியது, போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 65 ஆயிரத்து 350 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த தகவலை டி.எஸ்.பி. குமார் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில்:-

    கடந்த ஆண்டு 39 திருட்டு வழக்குகளில் 31 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    • போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதையடுத்து ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 

    • ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

    தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் விதிமுறைகள் மீறுபவர்க ளுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

    மாவட்டத்தில் 2 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோடு பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோ தனையில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டி யது என 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ப ட்டது.

    இதில் பெரும்பா லும் ஹெ ல்மெ ட் அணி யா மல் செ ன்றவ ர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க ப்பட்டது. இதே ப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர். இன்று 3-வது நாளாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    • குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன.
    • 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 204 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 14 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,62,600 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 93 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறிய 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவு செல்கின்றன. ஒருசில ஆட்டோ உரிமையாளர்கள் முறையாக ஆவணம் இன்றி ஒட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரின் அறிவுரையின் படி பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிசந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் பரமேஸ்வரபத்மநாபன் ஆகியோர் இணைந்து நகரம் முழுவதும் திடீர் ஆய்வு செய்தனர்.

    அதில் எவ்வித ஆவணம் இன்றி ஆட்டோ ஓட்டுதல், உரிமை இல்லாதவை, திருச்சி, கோவை பகுதியிலிருந்து ஆவணமின்றி எடுத்து வந்து பண்ருட்டியில் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆட்டோ முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்ட கூடாது. யூனிபார்ம் அணிய வேண்டும். அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    • போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 172 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 21 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது,நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 78 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • இரு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
    • விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    பல்லடம் :

    பொதுமக்கள் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஜூலை மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 176 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களை ஓட்டிச்சென்ற 15 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது, நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 679 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,02,500 வசூலிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 74 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 230நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடத்தில், போக்குவரத்து விதிகளை மீறிய 1,351 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-
      பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்.

    குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும்.போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன. 

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

    இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 394 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 26 பேர்  உள்பட மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்குசக்கர வாகனங்களில் செல்கையில்  சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 1351 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.3,20,200 வசூலிக்கப்பட்டது. 

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 230நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    ×