search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violation of"

    • போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதையடுத்து ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 

    ×