search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "netizens"

    • பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
    • வங்க தேச போட்டியில் எளிதாக இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

    மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நாளை மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:

    இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை நாளைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் 'டேட்டிங்' செய்ய தயார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த "அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்" என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    நாளை நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.



    • கடையில் புகுந்து பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
    • மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. பெண்ணை தாக்கிய வழக்கில் அவரையும் அவரது கணவர் மற்றும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி தலைவராக இருப்பவர் சுமத்ரா. அதே ஊராட்சியில் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த செம்மலர்(42) என்ற பெண் பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டதாகவும், அதுக்குறித்து செம்மலர் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நியாயம் கேட்டு பேசிய ஆடியோ பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுக்குறித்து சில தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் இருதரப்பினரையும் கண்டித்து அனுப்பியுள்ள னர்.

    இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 19ந்தேதி காலை சுமார் 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது தரப்பினரும்- மணலி கடைவீதியில் செம்மலர் நடத்திவரும் தையற்கடையில் புகுந்து அப்பெண்ணை தாக்கியதோடு, நடுரோட்டில் தர,தரவென இழுத்து போட்டுள்ளனர்.

    அதுக்குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மயக்கமுற்று கிடந்த செம்மலரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குணசீலன்(32) என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள சுமத்ரா மற்றும் அவரது கணவர் ரவி உட்பட 13 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில் குடிநீர், சுகாதாரம், தெரு மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு யாரை நாடுவது என்று பொதுமக்கள் குழம்பியுள்ளதோடு - மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×