என் மலர்
நீங்கள் தேடியது "வால்மார்ட்"
- வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் இந்தியா வந்துள்ளார்.
- தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டக் மெக்மில்லனுடனான சந்திப்பு பலனளிக்கும் ஒன்றாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவெடுத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
கனடாவில் வால்மார்ட்டில் வாக்-இன் ஓவனுக்குள் 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை தெரிவிக்கவில்லை.
போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
- அமெரிக்காவை மையமாக கொண்டு வால்மார்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது.
உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தில் அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.
இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Walmart spent $1.25MM on their new logo… pic.twitter.com/yUXNIx2oj9
— David Santa Carla ? (@TheOnlyDSC) January 14, 2025
- விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை.
- பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு.
டுபேலா:
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி இருந்த அந்த 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த நபர் விமானத்தை டுபெலோவிற்கு வடகிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள ஆஷ்லாந்து வயல் வெளியில் தரையிறக்கினார். விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர் கோரி பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டார். அவரிடம் பைலட் உரிமம் இல்லை என்பதும், 10 ஆண்டுகளாக டுபெலோ நகர விமான நிலையத்தில் அவர் லைன்மேனாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரம்பும் பணியிலும் ஈடுபட்டு வந்த பேட்டர்சன், 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடி அதை வைத்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப அச்சுறுத்தலுக்குப் பிறகு, அவர் தன்னையோ அல்லது வேறு யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் டுபேலா நகர போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் மிசிசிப்பி மாகாண ஆளுநர் ரீவ்ஸ் தமது ட்விட்டர் பதிவில் நிலைமை சீரடைந்து விட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் மிசிசிபியில் வால்மார்ட் அங்காடி செயல்பட்டு வருகிறது.
- வால்மார்ட்டை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தின் டுபேலா நகரில் பிரபல வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணையில், விமானத்தில் பறந்தபடி சுற்றி வரும் இளைஞர் விமானத்தை திருடிச்சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்