search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A case has been"

    • கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கோபி:

    கடத்தூர் போலீசார் காசிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த அரசு என்கிற ராமன் (19) மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோன்று பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய நம்பியூர் பகுதியை சேர்ந்த கவுதம் (20), அஜித்குமார்(21) ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    • 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது.
    • 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை அடுத்த தாளக்கரை பகுதி யில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட சமூக நல குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர் சண்முகவடிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஞானசேகரன், சுபாஷினி, தேவகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நில வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் சிறுமியைத் திருமணம் செய்த ஜோகி (22) உள்பட 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் படி போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
    • 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    இதில் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 133 வழக்கு, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 8 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 4 வழக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

    இதில் மதுபோதையில் வாகன ஓட்டிய மற்றும் செல்போன் பேசியபடி சென்ற 4 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

    ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் பல்வேறு பணிக்கு சென்று விட்டதால் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்துள்ளது.

    வரும் நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

    தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் விதிமுறைகள் மீறுபவர்க ளுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

    மாவட்டத்தில் 2 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோடு பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோ தனையில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியப்படி வாகனம் ஓட்டி யது என 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ப ட்டது.

    இதில் பெரும்பா லும் ஹெ ல்மெ ட் அணி யா மல் செ ன்றவ ர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க ப்பட்டது. இதே ப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 277 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவி த்தனர். இன்று 3-வது நாளாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    • அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர்.
    • காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.‌

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கரிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 23). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    அஜித்தின் மாமா சங்கர் என்பவருக்கும், சிறுவலூரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் கடந்த மாதம் சிறுவலூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வாய் தகராறு ஏற்பட்டு பிரதாப் குடிபோதையில் சங்கரையும் மற்றவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

    தனது மாமா சங்கர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை பிரதாப் திட்டியதற்கு ஊருக்கு வந்திருந்த அஜித், பிரதாப்பிடம் ஏன் எதற்காக எனது மாமாக்களிடம் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.

    இதனால் பிரதாப் அஜித் மீது முன்பகை கொண்டு தீபாவளி அன்று தனது நண்பர்களான இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோருடன் சேர்ந்து சிறுவலூரிலிருந்து அஜித் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் வீட்டிற்கு வெளியே கோவிலில் உட்கார்ந்து இருந்த அஜித்தை பார்த்து உனது மாமாவை திட்டினால் உனக்கு எதற்கடா ரோஷம் வருது என பேசி தகாத வார்த்தை களால் பேசியும் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து கையாலும், காலாலும், கற்களாலும் அடித்துள்ளனர்.

    அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது உறவின ரான பழனிச்சாமி என்பவர் ஓடி வந்து தடுக்க முயன்றபோது, அனைவரும் சேர்ந்து பழனிச்சாமியையும் அடித்து உதைத்து கல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இருவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர். காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.‌

    அஜித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து அஜித் கொடுத்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரதாப், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட பிரதாப் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுவலூர் போலீஸ் நிலை யத்தில் மற்றொரு அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×