என் மலர்

  சினிமா

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
  X

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் ‘தல 59’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Ajith #Thala59
  அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் அறிந்தோம்.

  இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்று உறுதி செய்யப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.   தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’, ‘ஏகன்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். 
  Next Story
  ×