search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Boney Kapoor"

  • 1996-ம் ஆண்டு ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

  'கந்தன் கருணை' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின்னர் 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.


  நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின்னர் பல தகவல்களுக்கு பிறகு அது ஓய்ந்தது.


  இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் எனக்கு நடந்தன. இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது தற்செயலாக நடந்த விபத்து என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


  ஸ்ரீதேவி திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். அப்போது தான் மருத்துவர் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் டயட்டில் இருந்ததால் குளியலறையில் விழுந்து பல் உடைந்து போனதாக ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்'' என்று போனி கபூர் கூறினார்.

  • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'.
  • இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

  கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. அதன்பின்னர் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.

   

  லவ் டுடே

  லவ் டுடே

  சில தினங்களுக்கு முன்பு 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர் என்றும் இதன் இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க, அஜித்தின் துணிவு படத்தை தயாரித்து வரும் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசி வந்தனர்.

   

  போனி கபூர்

  போனி கபூர்

  இந்நிலையில் 'லவ் டுடே' இந்தி ரீமேக் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

  தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.
  மறைந்த நடிகை ஸ்ரீதேவின் கணவர் மற்றும் தயாரிப்பாளரான போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.

  இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட் கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. 

  குடும்பத்தினருடன் போனிகபூர்
  குடும்பத்தினருடன் போனிகபூர்

  தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார். 

  போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் - அஜித் இணையும் தல 60 படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

  அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.  இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். மேலும் அஜித் இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  `நேர்கொண்ட பார்வை' படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

  இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

  அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.  இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
  நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.

  தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

  இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.  இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-

  “குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.

  சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”

  இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor

  `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

  இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


  அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

  அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
  அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.  ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

  யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin

  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், நடிகையை பின்னால் தட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். #BoneyKapoor #UrvashiRautela
  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா மற்றும் நடிகர்கள் பலர் மும்பையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மகள் வயது பெண்ணை இப்படி செய்யலாமா என்று போனிகபூரை விளாசினார்கள். பின்னால் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலா முகம் மாறிவிட்டது. இப்படி கேவலமாக போனிகபூர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று சிலர் பதிவிட்டனர்.   திரையுலகில் மூத்தவரான போனிகபூர் இப்படி நடந்து கொள்ளலாமா, சினிமா துறையில் இதெல்லாம் சகஜம்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊர்வசி ரவ்தெலா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ‘‘சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

  போனிகபூர் தட்டியபோது அசவுகரியமாக உணர்ந்த ஊர்வசி பட வாய்ப்புகளுக்காக இப்போது அவருக்கு ஆதரவாக பேசுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.