என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "necklace"

    • இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி.யாக இருந்தவர் நான்சி ஆஸ்டர்.
    • இவர் அணிந்திருந்த வைரக் கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி. நான்சி ஆஸ்டர். அமெரிக்க வம்சாவளியான இவர் 1919-ல் இங்கிலாந்தின் பிளைமவுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    அங்கு மது அருந்தும் வயதை 14-ல் இருந்து 18 ஆக உயர்த்துதல், பெண்களின் வாக்குரிமை வயதை 30-ல் இருந்து 21 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் இவரது பங்கு அளப்பரியது.

    எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் ஆஸ்டர் நான்சிக்கு ஒரு கிரீடத்தைப் பரிசாக வழங்கினார். வைரத்தால் செய்யப்பட்ட அந்தக் கிரீடம் காண்போரின் கண்ணை கவரும் வகையில் இன்றும் அழகுடன் மிளிர்கிறது.

    இதனை 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முதன்முறையாக அணிந்திருந்தார். அப்போது பலரது கவனத்தையும் இந்த கிரீடம் ஈர்த்தது.

    இந்நிலையில், அவர் அணிந்திருந்த வைர கிரீடத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.

    இதில் நான்சி ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

    • மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
    • திருப்பதியில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

    தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



    இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர்.

    ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில் மும்பையில் 'மைதான்' படத்தின் 'பிரிமியர் ஷோ' வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.




    மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×