என் மலர்
நீங்கள் தேடியது "வைர நகை"
- இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி.யாக இருந்தவர் நான்சி ஆஸ்டர்.
- இவர் அணிந்திருந்த வைரக் கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி. நான்சி ஆஸ்டர். அமெரிக்க வம்சாவளியான இவர் 1919-ல் இங்கிலாந்தின் பிளைமவுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
அங்கு மது அருந்தும் வயதை 14-ல் இருந்து 18 ஆக உயர்த்துதல், பெண்களின் வாக்குரிமை வயதை 30-ல் இருந்து 21 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் இவரது பங்கு அளப்பரியது.
எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் ஆஸ்டர் நான்சிக்கு ஒரு கிரீடத்தைப் பரிசாக வழங்கினார். வைரத்தால் செய்யப்பட்ட அந்தக் கிரீடம் காண்போரின் கண்ணை கவரும் வகையில் இன்றும் அழகுடன் மிளிர்கிறது.
இதனை 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முதன்முறையாக அணிந்திருந்தார். அப்போது பலரது கவனத்தையும் இந்த கிரீடம் ஈர்த்தது.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த வைர கிரீடத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.
இதில் நான்சி ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
- முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள், மகன்கள், மருமகள்கள் ஆடம்பர உடைகள் அணிந்த குரூப் போட்டோக்கள் வெளியாகின
- உயர் ரக வைர நகைகள், அணிந்து ஜொலிப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது
இந்தியாவின் பெரும் தொழிலதிபரும், பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்சன்டிற்கும் ஜூலை 12- ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகுஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 3- ந் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் பிரம்மாண்ட ஆடம்பர கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். ரஜினி தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் குஜராத் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், உலகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழா தொடர்பான வீடியோக்கள், புகைப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை உலகம் முழுவதும் அனைவரும் பார்த்து வியந்தனர். அம்பானி குடும்பத்தினர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள், மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட அனைவரும் விலை உயர்ந்த ஆடம்பர உடைகள் அணிந்த குரூப் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.

சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான உயர் ரக வைர நகைகள், அணிந்து ஜொலிப்பது போன்ற படங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது.






