search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diamond"

    • துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக பதிலளித்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் கவர்களால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் இருந்தன.

    மொத்தம் 5 ஆயிரத்து 569.64 காரட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 6.03 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு கிலோ வெள்ளியில் வைரஸ் பதிக்கப்பட்டுள்ளது.
    • 40 கலைஞர்கள் 35 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

    வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

    இந்த வைர நெக்லஸ் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    40 கலைஞர்கள் 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளது. இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி தெரிவித்துள்ளது. சூர்த்தில் உளள் ராமர் கோவில் போன்று இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

    உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    மேலும், 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.

    வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது.

    இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • அந்த வைரத்துக்கு ‘லுலோ ரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    லுவாண்டா :

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா வைரங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ நகரில் ஆஸ்திரேலியாவின் லுகாபா வைர நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 170 காரட் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இது, உலகில் கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் என லுகாபா வைர சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லுலோ நகரில் கண்டெடுக்கப்பட்டதால், அந்த வைரத்துக்கு 'லுலோ ரோஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று.
    • வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும்.

    ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று. ராசிக்கல் என்பதைத் தவிர்த்து, வைர நகைகளை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்புவார்கள். ஆனால், பிற உலோகங்களை வாங்குவது போல, வைரத்தை, நகையாக இருந்தாலும், ரத்தினக் கல்லாக ராசிக்கு வாங்கினாலும் சரி, அத்தனை எளிதாக அல்லது உடனடியாக வாங்கிட முடியாது.

    நகைகள் வாங்கும் போதே, வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். வைர நகை வாங்கும் போது. ஆங்கிலத்தில் CCC ஐப் பார்க்க வேண்டும், அதாவது Cut, Clarity மற்றும் Carat என்ற அடிப்படையில் வாங்க வேண்டும். அதே போல, வைரம் அணிவது எல்லா ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்காது. 12 ராசிகளுக்கு, ஒரு சிலர் மட்டுமே, வைரத்தை அணிவது அதிர்ஷ்டமாக இருக்கும். வேத ஜோதிடத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் எல்லாம் வைரம் அணிவது சாதகமாக இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    வைரம் அணிவதால் சுக்கிரன் சார்ந்த அம்சங்கள் மேம்படும்...

    காதல் மற்றும் உறவுகளை ஆளும் கிரகம் சுக்கிரன். இது வாழ்வின் அனைத்து இன்பங்களையும் வழங்குகிறது. மேலும், சுக்கிரன் படைப்பாற்றலையும் குறிக்கிறது. கருணை, வசீகரம், ஆடம்பரம், நல்ல தூக்கம், மற்றும் அழகு ஆகியவற்றையும் சுக்கிரன் குறிக்கிறது. சுக்கிரனை மிகச்சிறந்த முறையில் குறிக்கும் ஒரு சொல் " மிகுதி ". இந்த அனைத்து குணாதிசயங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வைரங்களுடன் தொடர்புடையவை. ஜோதிட ரீதியாக, வைரம் சுக்கிரனின் நேர்மறையான சக்திகளைக் குறிக்கின்றது.

    எனவே, எந்தவொரு நபரின் ஜாதகத்திலும் சுக்கிரன் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அதிகமாகக் கொடுத்து, வசதியாக வாழ வைக்கும்.

    வைரம் வாங்கியவுடனே, ஒரு சிலருக்கு உடனடியாக நல்ல அதிர்ஷ்டத்தையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ தரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜோதிட ரீதியாக சில ரத்தினக் கற்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ஒன்றோடு தொடர்புடையது.

    வாழ்க்கையில் அழகான, சொகுசான, மற்றும் ஆடம்பரமான விஷயங்கள் அனைத்தும் சுக்கிரனின் அம்சத்தைக் கொண்டுள்ளன. மேலும், சுக்கிரன் வானத்தில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் ஒரு கிரகம். எனவே, வைரத்தின் ஒளிரும் தன்மை மற்றும் நேரடியான ரிஃப்லகஷனுக்கு பொருந்தும் கிரகம் சுக்கிரன். ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும்.

    எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

    சுக்கிரன் 12 ராசிகளில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளை ஆட்சி செய்கிறது, மீன ராசியில் உச்சம் பெறுகிறது மற்றும் கன்னி ராசியில் நீசம் ஆகிறது.

    இந்த அடிப்படையில், சுக்கிரனின் ஆட்சி வீடுகளான, ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சுக்கிரன் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் மேம்படும். இவர்கள், ஜாதகம் பார்த்து வைரம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    அடுத்ததாக, எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந்தால், வைரம் அணிவது, அதிர்ஷ்டமான பலன்களைத் தரும்.

    ஒரு சில விதிமுறைகளின் அடிப்படையில் வைரத்தை அணியலாம். உதாரணமாக, சனியின் ஆளும் ராசியான மகர ராசி மற்றும் கும்ப ராசியினர் பிளாட்டினத்தில் உள்ள வைரத்தையும், நீல நிற சபையருடன் சேர்த்து அணியலாம்.

    மற்ற ராசிகளான கடகம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால், வைரம் அணிவது நல்ல பலன்களைத் தரும்.

    எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது?

    மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் எந்த ராசிக்காரர்களும் வைரம் அணியலாம்.

    காங்கயத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. பெண் பிரமுகர் வீட்டில் வைர நகை மற்றும் பணம் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம்- ஈரோடு சாலை வரதப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ஹரி. இவரது மனைவி பவித்ரவள்ளி. இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஹரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ஹரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    வெளியூர் சென்று வீடு திரும்பிய ஹரி தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    இந்த திருட்டு தொடர்பாக பவித்ரவள்ளி வீட்டில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தான் வைர நகை -பணத்தை திருடி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. #ExpensiveShoes
    துபாய்:

    ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ‘ஷு’ என்ற பெருமை பெற்றுள்ளது. அந்த ‘ஷு’ க்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.


    புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு ‘டெப்பி லிங்காம்’ ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு ரூ.110 கோடியாகும். #ExpensiveShoes
    ×