என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Price Rise"

    • அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
    • அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

    தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

    உலக நாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலவாணியான அமெரிக்க டாலரை தங்கமாக மாற்ற தொடங்கியதே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும். தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய முதல் காரணம்.

    அமெரிக்காவின் பல நடவடிக்கைகள் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய தொடக்கமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

    ஒரு வேளை அமெரிக்க பொருளாதாரம் மந்தமானால் அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பு ஏற்படும். ஏற்கனவே அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

    அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சமீபகாலமாக ஈரான் மீது போர் தொடுக்க வேண்டிய நோக்கத்தில் அமெரிக்கா போர்க் கப்பல்கள் சென்று கொண்டு இருக்கின்றன.

    அது அங்கு சென்று போர் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் பாதிப்பை உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உலகப் பொருளாதாரம் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தும் நிலை உருவாகும் எனக் கருதி பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலர்களை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள். இது 2-வது முக்கிய காரணமாகும்.

    இந்த இரண்டும் ஒரு சேர நடைபெற்று வருவதால் சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும் என்று கணக்கிட முடியாத அளவிற்கு உயரும். தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்வு.

    தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

    இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று காலையில் அதிகரித்த தங்கம் விலையை தொடர்ந்து, மாலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.365க்கும், ஒரு கிலோ ரூ.3.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1160 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியதால், பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை ரூ. 3 உயர்ந்த நிலையில் இன்று மாலை மேலும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது.
    • சமீப காலங்களில் டங்ஸ்டன் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும், குடும்ப மரபின் அடையாளமாகவும் இடம்பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதால், சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி விட்டன.

    கடந்த 1970-ம் ஆண்டு ரூ.3.32க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11 ஆயிரத்து 500-ஐ தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் உள்ள தகவல்களில் 5 மாற்று உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

    அதன் விவரம் வருமாறு:-

    பிளாட்டினம்:- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது. தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு முதலீடாகவும் இருக்கும்.

    பல்லேடியம்:- பிளாட்டினத்துடன் ஒருமித்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறத்தோற்றம், எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவற்றுக்கு ஏற்றது.

    டைட்டானியம்:- இது மிகவும் இலகுவானாலும், வலிமை மிகுந்தது. ஒவ்வாமை ஏற்படாததால், நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.

    டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது. சமீப காலங்களில் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.

    வெள்ளி:- எளிமையான விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரைவில் கருமை படர்வது ஒரு சவால்.

    அதேபோல் தங்கத்தின் சிறப்பே அது பொன்னிறமாக மின்னுவதுதான். எனவே 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்', டைட்டானியம் போன்ற மலிவு உலோகங்களுக்கு தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க முடியும். வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்கலாம். இதனால், கலைரீதியான பல நிற ஆபரணங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

    தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாத டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு நகைகள் தயாரிக்கலாம்.. இது தவிர ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது உண்மையான தங்கத்துடன் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமுள்ளதால், வணிக ரீதியில் இன்னும் அமல்படுத்தவில்லை.

    இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

    தங்கம் என்பது நம் பாரம்பரியம், நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றின் சின்னமாக இருப்பதால் அதை முற்றிலும் மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், தினசரி அணிவதற்கான ஆபரணங்களில் டைட்டானியம், பல்லேடியம், பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற உலோகங்களும், தங்கம் போல் தோற்றமளிக்கும் பூச்சுகளும் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வருங்காலத்தில் நம்முடைய நகைக்கடைகளில் தங்கம் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் புதிய உலோகங்களும் பிரகாசமாக காட்சி அளிக்க போகிறது. எனவே தங்கம் இல்லாவிட்டாலும், அதற்கு இணையான வேறு ஆபரணங்களும் சந்தைக்கு வர இருக்கின்றன.

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
    • இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது.

    சென்னை:

    தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது.

    அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

    கடந்த 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையாகிறது.

    ×