என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.400 அதிகரிப்பு: பவுன் ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது
- தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
- இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது.
சென்னை:
தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது.
அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
கடந்த 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையாகிறது.