என் மலர்
நீங்கள் தேடியது "Farmland"
- விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
- விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.
அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அபிராமம்
கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.
நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.
அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.
- வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர்.
- பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
காட்டுமன்னா ர்கோவில் ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான டன் மணல் கனரக வாகனங்கள் மூலம் எடுக்கப்பட்டு வெள்ளை மதகு அருகே விளை நிலத்தில் மணல்களை கொட்டி நிரப்புகின்றனர். இதுமட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரப்படும் கனரக வாகனங்களுக்கு மணலை விற்பதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த மணல் கொட்டி விற்பனை செய்வதற்கு விளைநிலத்தை வீணடிப்பததையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேரடியாக மணலை அள்ளுவதற்கு வழிவகை செய்யாவிட்டால் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அகில இந்தியவிவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
- விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
- தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.
- சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி பொன்வாச நல்லூர் இச்சலடி கிராமத்தில் சவூடுமண் குவாரியை தடுத்து நிறுத்த கோரியும், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரியும், விளைநிலங்களை பாதுகாத்திட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
விசிக மயிலாடுதுறை ஒன்றிய பொறுப்பாளர் சாமி சீசர் தலைமையில் நடைபெற்றது.
கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் பாதுகா க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு சட்டவிரோதமாக சவூடு மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது விசாரணை நடத்தி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்கூட்டியே இதுபோன்ற முறைகேடுகள் தெரிந்துயிருந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தகவல் அறிந்துவந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குவாரியை மூடுவதாக உறுதி அளித்தார்.
இருப்பினும் குவாரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
பின்னர் தோண்டிய பள்ளத்தை மூடிய பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வினோத், தாமோதரன், அறிவு, மற்றும் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கோவை, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் பாதை அமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளன.
விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 17-ந்தேதி முதல் விவசாயிகள் 8 மண்டலங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நிலங்களில் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறிச் சென்று செயற்கைக்கோள் மூலமாக அளவிட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றனர். விவசாயிகளிடமிருந்து அரசு நிலத்தை எடுக்கும் நடைமுறைகளை சிறிதும் பின்பற்றுவதில்லை. வேளாண் நிலங்களையே நம்பி இருக்கும் உழவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் இதன் காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது.
மின்கோபுரம் அமைக்கும்போது விவசாய நிலம் முற்றிலும் மதிப்பிழந்து போகிறது. இழப்பீடு கொடுப்பதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை மின்சாரம் செல்கிறது. இதில் தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் வழியாகவும் கேரள மாநிலத்தில் புதை வடக் கம்பிகள் வழியாகவும் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழக விவசாய நிலங்கள் மூன்று லட்சம் ஏக்கருக்குமேல் பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு, இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட 400 கிலோ வாட் மின்தட பாதை திட்டத்தை சாலை ஓரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல தமிழகத்திலும் பூமிக்கு அடியில் புதைவடக் கம்பிகள் வழியாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.
டிசம்பர் 27-ந்தேதி ஈரோடு மூலக்கரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பொது மக்களும் மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார். #Vaiko