search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்-விவசாயிகள் வேதனை
    X

    வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்-விவசாயிகள் வேதனை

    • ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அபிராமம்

    கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.

    நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.

    அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.

    Next Story
    ×