என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property issues"

    • போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் வழக்கு.
    • தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் வாங்கிய சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சொத்து பிரச்சினையில் சகோதரியின் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சத்யா வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×