என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி- போனி கபூர் வழக்கு
    X

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி- போனி கபூர் வழக்கு

    • போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் வழக்கு.
    • தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் வாங்கிய சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×