search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress sridevi"

    நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #SriDevi #Swissgovernment #SrideviStatue
    தமிழ் பட உலகில் பிரபலமாகி, இந்தி சினிமாவுக்கு சென்றவர் ஸ்ரீதேவி.

    தனது சிறந்த நடிப்பினால் இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்த ஸ்ரீதேவிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இப்போது,சுவிட்சர்லாந்து அரசும் கவுரவப்படுத்துகிறது.

    இந்தி பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் யாஷ் சோப்ரா. இவரது தயாரிப்பில் 1995-ல் ‘திர்வாலே துல் ஹனியா லேஜாயங்கே’ என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்.

    இது தவிர, இவருடைய இயக்கத்தில் பல்வேறு படங்கள் சுவிட்சர்லாந்தில் படமானது. இதனால் அதிக அளவில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர். எனவே அவருக்கு சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டு அரசு சிலை அமைத்தது. இது தவிர ரெயிலுக்கும், ஏரிக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.


    இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்படுகிறது. அந்த நாட்டு அரசு இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

    மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது.

    சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SriDevi #Swissgovernment
    நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை காவல் ஆணையர் வேத் பூ‌ஷன் தெரிவித்துள்ளார். #Sridevi
    புதுடெல்லி:

    உறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

    240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை கிடைக்கும் என்று இருக்கிறது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்?’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

    இந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ‌ஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

    இதுபற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ‘ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம்.


    துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் அந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள். துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் காவல்துறை அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம்’ என்றும் தெரித்து இருக்கிறார்.

    இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த சந்தேகங்கள் பற்றி பேசவே விரும்புவதில்லை. ஸ்ரீதேவியின் மரண மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. #Sridevi
    ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Sridevi #Sridev #Sridevideath
    பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர்.



    ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Sridevi #Sridev #Sridevideath
    ×