search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
    X

    சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை

    நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #SriDevi #Swissgovernment #SrideviStatue
    தமிழ் பட உலகில் பிரபலமாகி, இந்தி சினிமாவுக்கு சென்றவர் ஸ்ரீதேவி.

    தனது சிறந்த நடிப்பினால் இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்த ஸ்ரீதேவிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இப்போது,சுவிட்சர்லாந்து அரசும் கவுரவப்படுத்துகிறது.

    இந்தி பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் யாஷ் சோப்ரா. இவரது தயாரிப்பில் 1995-ல் ‘திர்வாலே துல் ஹனியா லேஜாயங்கே’ என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்.

    இது தவிர, இவருடைய இயக்கத்தில் பல்வேறு படங்கள் சுவிட்சர்லாந்தில் படமானது. இதனால் அதிக அளவில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர். எனவே அவருக்கு சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டு அரசு சிலை அமைத்தது. இது தவிர ரெயிலுக்கும், ஏரிக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.


    இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்படுகிறது. அந்த நாட்டு அரசு இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

    மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது.

    சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SriDevi #Swissgovernment
    Next Story
    ×