search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "cinema updates"

  • மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
  • ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

  மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.

  படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

  பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".

  நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

  '13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  • பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார்.
  • பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.

  சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.

  பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

  இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது. அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

  இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
  • விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்

  தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடி இன பெண்ணாக நடித்த மாளவிகா மோகனனின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.

  இவர் இந்தி மொழியில் உருவாகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் ரன்பீர் கபூருடன் அனிமல்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன். தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது அவரின் வழக்கம்.

  இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியுள்ள மாளவிகா மோகனன் ஓட்டல் அறையில் பிகினி உடையில் செல்பி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். மாளவிகா மோகனனனின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  • போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
  • ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்


     ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

  முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

   


   
     ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  ×