கமல் ஹாசன் - சல்மான் கான் காம்போவில் அட்லீ இயக்கும் புதிய படம்?.. ஷூட்டிங் எப்போ?

ஹிந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டியதுஇரண்டு ஹீரோ சப்ஜக்ட்டாக இந்த படத்தை அட்லீ உருவாக்க உள்ளார்
கமல் ஹாசன் - சல்மான் கான் காம்போவில் அட்லீ இயக்கும் புதிய படம்?.. ஷூட்டிங் எப்போ?
Published on

'ராஜா ராணி' மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்று விஜய்யின் 'தெறி'- 'மெர்சல்'- 'பிகில்' படங்களை இயங்கி தொடர் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லீ. கடைசியாக ஹிந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இடையில் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் பான் இந்தியா ஆக்சன் என்டர்டெயினர் படம் ஒன்றை அட்லீ இயக்க உள்ளதாகவும் அதில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வளம் வரும் சல்மான் கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

சல்மான் கானுக்கு அட்லீயின் கதை பிடித்துப்போகவே அவர் படத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம். இரண்டு ஹீரோ சப்ஜக்ட்டாக இந்த படத்தை அட்லீ உருவாக்க உள்ள நிலையில் சல்மான் கானோடு கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் அடுத்த வருடம் [2025] ஜனவரி மாதமே படப்பிடிப்பை அட்லீ தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பிரபாஸின் 'கல்கி 2898 AD' படத்தில் அமிதாப் பச்சனுடம் முக்கிய தோற்றத்தில் கமல் மல்டி ஸ்டார் சபிஜக்டில் நடித்துள்ள நிலையில் இந்த படத்துக்கும் கமல் ஓகே சொல்வார் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்தில் சல்மான் கான் நடித்து வருவது குறிப்பிடத்தத்க்து.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com