search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vidya Balan"

  • போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்.
  • இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார்.

  சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து வித்யாபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் 'வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 'வாட்ஸ்-அப்'பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்', என்று கூறியுள்ளார்.

  மேலும், 'இதுகுறித்து தனது குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம். அப்படி அந்த போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

  • டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
  • படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

  சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அவருடன் இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.


  இந்நிலையில் கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. விழாவில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நேர்காணலில் கலந்துரையாடினார். அதில், தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்கு நான் ஆர்வமுடன் இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை.


  மக்கள் என்னால் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை. படத்தில் நான் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னிடம் பெரும்பாலானோர் இது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை அழிக்கும் என்றனர். சிலர் எனக்கு பைத்தியம் என்று நினைத்தனர். படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்த போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து நடிப்பதால் தான் நான் இன்றும் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினார்.

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

  இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  சில்க் சுமிதாவை தொடர்ந்து சகுந்தலா தேவியின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை வித்யாபாலன். #VidyaBalan #ShakuntalaDevi
  கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் சினிமாவில் வித்யாபாலன், சகுந்தலா தேவியாக நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  இந்த படத்தை அனு மேனன் இயக்குகிறார். இவர் சில ஆங்கில படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்துள்ளார்.  1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இரண்டு 13 எண்களைப் பெருக்கி, 23 விநாடிகளில் பதில் கூறி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கணிதம் தவிர, நாவல்கள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
  `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar
  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

  இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


  அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

  அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
  அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.  ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

  யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar
  அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

  இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் - வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
  அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

  இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். 

  பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் பிங்க் ரீமேக் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளதாக ஷ்ரத்தா ஸ்ரீனாத் கூறியுள்ளார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar
  அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

  நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.  படம் அஜித் பிறந்தநாளான மே1-ந் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாக சென்றாலும், விஸ்வாசம் படத்திற்கு இப்போது வரை, வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது. 

  இதனால் மே 1-ந் தேதி வெளியீட்டுக்கு பதிலாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath 

  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க பிரபல மூத்த நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #AjithKumar
  அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

  தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, ‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று செய்திகள் வருகின்றன. மே 1-ந் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த `மிஸ்டர்.லோக்கல்' படமும் ரிலீசாக இருக்கிறது. இதன் மூலம் அஜித், சிவகார்த்திகேயன்  படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகி உள்ளது. #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath #DelhiGanesh