என் மலர்
சினிமா

அஜித் படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபலம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin
Next Story






