என் மலர்

  நீங்கள் தேடியது "Ramcharan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண்.
  • ரசிகர்கள் எழுப்பிய கேளிவிக்கு நடிகர் ராம்சரண் காட்டமாக பதிலளித்துள்ளார்.

  தெலுங்கு ஹீரோ ராம் சரண் பற்றி காரசார விவாதம் தெலுங்கு சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் தனது 10வதுஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அப்போது சில ரசிகர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் ராம் சரண்-உபாசனா தம்பதிகள் திருமண்ம் செய்து கொண்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பி வந்தார்கள்.

  இதற்கு பதிலளித்த ராம் சரண் கூறியதாவது, நான் மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், அவரின் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. மேலும் நான் சினிமாவிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் பயணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதேபோல் எனது மனைவி உபாசனாவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அடைய வேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கிறது. அதற்கிடையில் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நாங்கள் யோசிக்கப்போதில்லை. மாறாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள எங்களுக்கு இன்னும் ஆண்டுகள் பல ஆகும். எங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எதற்காக கேள்வி எழுப்புகிறீர்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
  • இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமீபத்தில், 'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

  ஷங்கருக்கு, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகன் ராம்சரண் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  ராம்சரண் - ஹிருத்திக் ரோஷன்

  ராம்சரண் - ஹிருத்திக் ரோஷன்

  இந்த படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடித்து விட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நீருக்கடியில் எடுக்கப்படும் இந்த படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

  ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
  ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

  இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ பாணியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் பிரியாமணி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RRR #Priyamani
  ராஜமவுலி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு சமமாக பேசப்படுவார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இதுவரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

  இந்நிலையில், தற்போது நடிகை பிரியாமணி, ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.  இவர் நாயகியாகவா அல்லது மற்ற கதாபாத்திரமா என்பது முறையான அறிவிப்புக்குப் பின்னரே தெரிய வரும். கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய ‘எமடோன்கா’ என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Priyamani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொயாபதி சீனு இயக்கத்தில் ராம்சரன் நடிப்பில் உருவாகி வரும் ‘வினய விதய ராமா’ படத்தில் பிராந்த் நடித்துள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #VinayaVidheyaRaama #Prasanth
  ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘வினய விதய ராமா’ தெலுங்குப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பொயாபதி சீனு இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

  படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டீசரில் இரண்டு இடத்தில் வருகின்றன. அதில் ஒரு காட்சியில் ராம் சரணுக்கு பின்னால் நடந்து வரும் நான்கு பேரில் ஒருவராக பிரசாந்த் வருகிறார். இதைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.  நடிகர் பிரசாந்த் ’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த் தமிழில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VinayaVidheyaRaama #Prashanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். #Rajamouli #KeerthySuresh
  இயக்குனர் ராஜமவுலியின் படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் அவர் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.

  அண்மையில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேசின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் பாராட்டியவர் இயக்குனர் ராஜமவுலி தான். அப்போதே ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வந்தது. அது உறுதியாகி இருக்கிறது. ராஜமவுலி அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். 

  இதில் இரண்டில் ஒரு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

  படத்திற்கு தற்போது ஆர்ஆர்ஆர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கி, படம் 2020-ம் ஆண்டு ரிலீசாகும். #Rajamouli #KeerthySuresh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் `ஆர்ஆர்ஆர்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #RRR #KeerthySuresh
  நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி. 

  இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.   கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. #RRR #KeerthySuresh
  ×