என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜுனியர் என் டி ஆர்"

    • ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
    • ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

    'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படத்திற்காக NTR 15 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று NTR படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருப்பதை உறுதி செய்யும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • மறைந்த புனித் ராஜ்குமாருக்கு இன்று கர்நாடகா ரத்னா விருது வழங்கப்பட்டது.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


    ரஜினிகாந்த் - ஜுனியர் என்.டி.ஆர்

    இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.


    விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

    இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்க புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி இந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், "நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை" என்று பேசினார்.

    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
    • இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். வழங்கினர்.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


    விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

    மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.


    பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.


    ஆர்.ஆர்.ஆர்

    இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த விழா 2023-ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

    இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு என்.டி.ஆர்.30 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.


    ஜூனியர் என்.டி.ஆர்

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் அவர் நடிக்கும் 30-வது படம் குறித்து அப்டேட் கேட்டப்போது அவர் கூறியதாவது, "நாங்கள் ஒரு படத்தை உருவாக்கும்போது உண்மையில் அதைப்பற்றி எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் அப்டேட் கொடுத்துக்கொண்டிருப்பது மிகவும் கடினம். உங்களின் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அது சில சமயங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது.

    அப்படியே அப்டேட்டுகள் கொடுத்தாலும் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ட்ரோல் செய்கிறீர்கள். அப்படி ஏதேனும் அப்டேட் இருந்தால், அதை எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பு உங்களிடம் தான் முதலில் தெரிவிப்போம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். உறுதியான அப்டேட் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கொடுப்போம்" என்று பேசினார்.

    ×