உலக அளவில் கெத்து காட்டும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.. குவியும் வாழ்த்துகள்..

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர்
Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஆர்.ஆர்.ஆர்

இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த விழா 2023-ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com