புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை - நடிகர் ரஜினிகாந்த்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.மறைந்த புனித் ராஜ்குமாருக்கு இன்று கர்நாடகா ரத்னா விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

ரஜினிகாந்த் - ஜுனியர் என்.டி.ஆர்

இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.

விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்க புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி இந்த விருதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், "நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com