நடனத்தில் கலக்கும் ராம் சரண்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ‘ஆர்சி15’.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராம்சரண்
ராம்சரண்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

ஆர்.சி.15

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com