என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்ஆர்ஆர்"
- 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டனர்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கி விளையாடியது.
இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள், துருவ் ஜூரல் 35, ரியான் பராங் 30 ரன்கள், சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
இதன் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
174 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிலிஃப் சால்ட்- 65, விராட் கோலி- 62, தேவ்தட் படிக்கல்- 40 ரன்கள் எடுத்தனர்.
- சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி.
ஆஸ்கார் அகாடமி 2028 ஆம் ஆண்டில் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்டண்ட் கலையை அங்கீகரித்து அதற்கு அதிகாரப்பூர்வ விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆஸ்கர் குழு, ஸ்டண்ட் வடிவமைப்பு எப்போதும் திரைப்படங்களின் மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
இப்போது, அவை ஆஸ்கார் விருதுகளின் ஒரு பகுதியாகும். 2028 ஆம் ஆண்டில் 100வது ஆஸ்கார் விருதுகளுடன் இந்த பிரிவு தொடங்கப்படும். அதில், 2027 இல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் வடிவமைப்புகுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆஸ்கார் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யங் ஆகியோர் கூட்டாகக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர்.
இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சிறந்த பணிகளைப் போற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அடைவதில் அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த RRR படமும் இடம்பெற்றுள்ளது.
இதை முன்னிட்டு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 'இறுதியாக!' 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன்.
இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'RRR' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

எம். எம். கீரவாணி
இதையடுத்து 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. இந்நிலையில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர். படக்குழு
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'ஆர்.ஆர்.ஆர்'திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமௌலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
அதில், "இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார். படம் குறித்து நீங்கள் பத்து நிமிடம் எங்களுடன் பகுப்பாய்வு செய்தது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
The great James Cameron watched RRR.. He liked it so much that he recommended to his wife Suzy and watched it again with her.????
— rajamouli ss (@ssrajamouli) January 16, 2023
Sir I still cannot believe you spent a whole 10 minutes with us analyzing our movie. As you said I AM ON TOP OF THE WORLD... Thank you both ???? pic.twitter.com/0EvZeoVrVa
- கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
- 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.
அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.
சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.
- தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன்.
- உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோசுக்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- தெலுங்கு பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது.
- 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
சினிமா கலைஞர்களுக்கு எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆஸ்கர் விருது பெறுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று பங்கேற்பதையும் சினிமா கலைஞர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் ஆஸ்கர் விருது பெறுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டு சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது.
இந்த ஆண்டு 95-வது ஆண்டாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடந்த இந்த கோலாகல விழாவில் உலகின் பல்வேறு நாட்டு சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர், ஆல்தட், பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 3 படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
ஆல்தட் பிரீத்ஸ், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆவண குறும்படங்கள் வரிசையில் இடம்பெற்று இருந்தன. ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த தடவை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு எப்படியும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி (மரகதமணி) பாடகர்கள் ராகுல், கால பைரவா இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்றனர். பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் வித்தியாசமான உடை அலங்காரத்தில் பங்கேற்றார்.
விழாவில் ஒவ்வொரு பிரிவாக விருதுகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த கரகோஷம் நிலவியது. முதலில் குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பை சித்தரித்து எடுக்கப்பட்டு இருந்தது. கார்திகி இயக்கிய இந்த படம் 39 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.
தமிழில் தயாரிக்கப்பட்ட இந்த படம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள், ரகு, பொம்மி மற்றும் இந்த யானைகளை பராமரிக்கும் பாகன் பொம்மன், அவர் மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. நெட்பிளிக்சில் கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. தமிழ் ஆவண குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழ் திரை உலகினர், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து பாடல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சேர்ந்து ஆடியிருப்பது போன்று கலைஞர்கள் ஆடி ஆஸ்கர் விருது விழா பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.
அதன்பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி அதை பெற்றுக்கொண்ட னர். அவர்கள் இருவரும் விழா மேடையில் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்து பேசினார்கள்.
'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜெய்ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்த பாடலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.
தெலுங்கு பாடலான அந்த பாடல் 4.35 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த 4 நிமிடமும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சிறப்பாக ஆடியது உலகையே கவர்ந்துள்ளது.
ஆஸ்கர் விழாவில் மற்ற விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் விவரம் வருமாறு:-
சிறந்த படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகர் பிரண்டன் பிரேசர், சிறந்த நடிகை மிஷல் இயோ.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்-பினோச்சியோ, சிறந்த துணை நடிகர்-கீ ஹ்யூ குவான், சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ், சிறந்த ஆவணப்படம் நாவல்னி, சிறந்த குறும்படம் ஐரிஷ் குட்பை, சிறந்த ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் பிரண்ட், சிறந்த ஒப்பனை தி வேல், சிறந்த ஆடை வடிவமைப்பு பிளாக் பாந்தர், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் அவதார்-2.
- நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. குறிப்பாக டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் தூதுவர் மற்றும் ஊழியர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்த நிலையில் நேற்று 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.
இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.
பின்னணியில் இசை ஒலிக்க அந்த நபரின் தோள்களில் கையை வைத்து கொண்டு 2 போலீஸ்காரர்களும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி 'லைக்'குகளை குவித்து கொண்டிருக்கிறது.
- ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் இத்தாலியில் காலமானார்.
- இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர்.
வாஷிங்டன்:
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர். ஸ்டீவன்சன் ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி! ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் சர் ஸ்காட் ஆக என்றென்றும் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளது.
- இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் ஆர்.ஆர்.ஆர்.
- இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் ரே ஸ்டீவன்சன் நடித்திருந்தார்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்.ஆர்.ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

ரே ஸ்டீவன்சன்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இவர் ஏற்று நடித்திருந்த சர் ஸ்காட் என்ற எதிர்மறையான ஆங்கில கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது மறைவு ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரே ஸ்டீவன்சன்
இந்நிலையில், ரே ஸ்டீவன்சன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவு ஒன்றை பகிந்துள்ளார். அதில், "நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. ரே மிகவும் துடிப்பான நபர். அவரது ஆற்றலை படப்பிடிப்பு தளம் முழுவதும் பரப்பிவிடுவார். அவருடன் பணிப்புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
Shocking... Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.
— rajamouli ss (@ssrajamouli) May 23, 2023
My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD
- இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது.

நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | J&K: Actor Ram Charan dances to the tunes of 'Naatu Naatu' song from RRR movie, in Srinagar. pic.twitter.com/9oZ8c9sYBY
— ANI (@ANI) May 22, 2023
- உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.
Сила твітеру: вже вийшла стаття у @timesofindia про ?? версію 'Naatu Naatu'
— Jane_fedotova?? (@jane_fedotova) May 30, 2023
'The clever adaptation of the lyrics to reflect the military context' - такими словами вкотре звернеться увага на те, що війна не закінчилася.
Стаття тут: https://t.co/1tGoCLd8lN https://t.co/NEKOz6eG7L