உலகின் உச்சியில் ராஜமௌலி.. 'அவதார்' இயக்குனர் பார்த்து ரசித்த ஆர்.ஆர்.ஆர்..

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர். படக்குழு

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி

சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'ஆர்.ஆர்.ஆர்'திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமௌலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி

அதில், "இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார். படம் குறித்து நீங்கள் பத்து நிமிடம் எங்களுடன் பகுப்பாய்வு செய்தது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com