search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naatu Naatu Song"

    • இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
    • ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.

    மார்ச் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.

    இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.

    டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.

    • நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

    ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. குறிப்பாக டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரகத்தில் தூதுவர் மற்றும் ஊழியர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்த நிலையில் நேற்று 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை வென்றது.

    இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் ஒரு வாலிபருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் போலீஸ்காரர்களுடன் இணைந்து ஆடும் நபர் ஹோலி கொண்டாடியது போல தெரிகிறது.

    பின்னணியில் இசை ஒலிக்க அந்த நபரின் தோள்களில் கையை வைத்து கொண்டு 2 போலீஸ்காரர்களும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி 'லைக்'குகளை குவித்து கொண்டிருக்கிறது.

    ×