விஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணைந்த ராம் சரண்

ராம் சரண் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்.சி.15 படத்தில் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
ராம் சரண்
ராம் சரண்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.சி.15 

இதைத்தொடர்ந்து, நடிகர் ராம் சரண் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா எழுதி இயக்குகிறார். இதனை நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ராம் சரண் பதிவு

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற 'உப்பென்னா' திரைப்படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com